கவிதை தொடர்ச்சி
இன்றைய பொழுது சேமிக்க மட்டும், நாளையோ முற்றும் களிகூர,
உண்மையில் அந்த நாளை வரும்பொழுது எமன் வோலை வரும்,
பொருள் யாவும் கற்பூரமாய் கரைந்து போகும் காற்றோடு காற்றாக,
அதுவா வாழ்க்கை??? இல்லை!!
வாழ்க்கை ஒன்றே, வாழ்வின் மணித்துளிகள் சிதறி நறுமனமாகட்டும்,
வலி நெடுக அன்னருமணம் கமழட்டும், சிரிப்பலையினால் கன்னம் வலிக்கட்டும்,
கண்கள் ஆனந்தத்தினால் பொங்கட்டும், காணும் கண்கள் வியப்பினால் நிறையட்டும்,
சூராவழியும் சுருண்டு ஓடும் உன் வாழ்வை கண்டு,
உள்ளம் பொருளினால் அல்ல அமைதி பூக்களால் நிறைந்திருக்கும்,
சந்தோஷ சரித்திரம் படைக்க சிந்தித்து எழுவாய் இந்நாளே!!
No comments:
Post a Comment