Friday, 23 August 2013


நட்பே எனை பிரியாதே, பிரிந்தாலும் எனை மறவாதே!!


தெய்வ குணம் ஒன்று வானுடைத்து வீதியில்,
காற்றாய், வாசனையாய், சிரிப்பொலியாய், நிம்மதியாய், நம்மத்தியில்,

நினைவறிந்த நாள்  முதலே என் கவச குண்டலமாய்,

விழி துவண்டு கண்ணீர் மல்கையில் பூவின் கையாய்,
துடைத்தது என் கவலையின் சுவடை,

பீறிடும் மகிழ்ச்சியின் முதல் காரணமாய்,
அகச்சிரிப்பாய் என்னுள்ளே,

அன்புப்பாலமாய் ஒற்றையடி பாதையாய்,
அன்பு உள்ளங்களுக்கு இடையே,

ஒரு சொல் போதாது, ஒரு இலக்கியம் போதாது, ஒரு வாழ்கை போதாது,
இதன் கண்ணியம் உணர,

பிறப்பும் சாவும் பொய்யாய் போகும் இந்த உண்மையை உணர்ந்தோர்க்கு,
என் வாழ்வின் வழியெல்லாம் இந்த விளக்கின் ஒளியோடு நடப்பேன்,
நட்பே எனை பிரியாதே, பிரிந்தாலும் எனை மறவாதே!!
எனை மறவாதே!!!

No comments:

Post a Comment