ஒரு நுனி ஒரு உளி ஒரு சுத்தியல்
ஒரு நுனி ஒரு உளி ஒரு சுத்தியல்,
நிதானம் செயலின் ஒளியாய்,
யதார்த்தம் செதுக்களின் அழகாய்,
வியர்வையும் உழைப்பும் கலவையாய்,
அன்பும் பாசமும் வண்ணங்களாய்,
... அறமும் உண்மையும் உரைக்கும் வெயிலாய்,
அரவணைப்பும் போதனையும் மலரின் மணமாய்,
உருவம் உயிர் சுவடாய் வரும் வரை செதுக்கின,
உதிரம் கசியும் உளி பிடித்த கைகள்,
சிலை வடிக்கும் சிற்பிகள் தானோ?
கையில் உதிரம் வடிந்தாலும், வடிப்பது உயிர் சிலை அல்லவா!!
சிலையே உயிர் சிலையே நினைவில் கொள்!!
உன் சிற்பிகளுக்கு கோவில் செதுக்கு உன் வாழ்க்கை முடியுமுன்னே!!
தாயென்றும் தந்தையென்றும் கொடுத்தானே அவனுக்கும் ஒரு நன்றி சொல்லிக்கொண்டே...

No comments:
Post a Comment