தொட்டில் கவிதையில் என் தகப்பன்சாமி
தவப்புதல்வன் பிறந்துவிட்டான் என்றானே,
வானை எட்ட என் முன்னே நின்றானே,
முழு மதியின் புன்னகையை தந்தானே,
அவன் சரித்திரம் என் பெயராய் அரிசி தட்டில்,
எழுதிய நொடியில் ஆயிரம் விளக்குகள் அவன் முகத்தில்,
சூரியனும் தோற்றது அவன் பிரகாசத்தில்,
என் அசைவு அவன் இருதய துடிபாய் கடக்க,
கிள்ளினான் என் கன்னம் சிவக்க,
ஒரு துளி அவன் கண்ணீர் என் நெற்றியில்,
அவன் மகனாய் நான் பிறக்க வேண்டுவேன் பல ஜென்மத்தில்,
என் தொட்டில் அவன் முகத்தை மறைக்க கண்ணயர்ந்தேன், கனவிலே என் தகப்பன்சாமியை காண!!

No comments:
Post a Comment