செவிட்டு கிழவனின் தள்ளுவண்டிக்கடை
ஐம்பது பைசா பெப்சிகள் அடுக்கு வண்ண வண்ணமாய்,
மிளகாய் பொடியில் ஊறிய நெல்லிக்காய் குவியல் குவிலாய்,
வெள்ளரியும் மாங்காயும் தினுசு தினுசாய்,
கல்கோனா முதல் ஆரஞ்சு மிட்டாய் வரை வித விதமாய்,
பல கண்ணாடி புட்டிகளில் பலர் நெஞ்சம் கவர இருக்க,
விளையாட்டின் நடுவில் வெயில் நடு மண்டையை பிளக்க,
பூமி அதிரும் சிரிப்புடன் ஈசலின் கூட்டமாய் எங்கள் நண்பர் படை,
ஓடினோம் அவரவர் பையில் சில்லறை சத்தம் கல கலக்க,
பண்டமாற்று முறைபோல் கிழவனின் கடையில் அவரவர் கைகளை நீட்ட,
பெப்சி என்ன நெல்லிக்காய் என்ன எங்கள் மனம் போலே வாங்கினோம் ஆசை தீர,
பெப்சி கரையக் கரைய எங்கள் மனங்களும் கரைந்தன நட்பின் ருசிக்கு,
நகைச்சுவை எங்கள் மூச்சுகாற்றனது,
சந்தோசம் எங்கள் இதய துடிப்பானது,
விரைந்து வரும் வேர்வை மழையை துடைத்தபடியே,
பிடரி அடிக்க ஓடினோம் செம்மண் புழுதியிலே திரும்பி விளையாட,
வெறும் மழையோ வெய்யிலோ நங்கள் அறியவில்லை,
நட்பின் மழையினிலே நிதம் நிதம் நனைந்ததினாலே!!
சிறு காசு கிடைத்ததினாலோ ஏனோ கிழவன் கையசைத்தான் சிறு புன்னகையோடே,
இன்று நடந்தது போல் என் நினைவில் ஆழம் விழுதாய் இந்த நிகழ்வு இருக்க,
வெளிக்கொணர்ந்தேன் என் உள்ளக் கதவை திறக்க!!

No comments:
Post a Comment