Friday, 23 August 2013


என் தங்க கிழவன்:

தங்க முடி கிரீடம் அவனது,
கள்ளமில்லா சிரிப்பு அவனது,
சோடா புட்டி கண்ணாடி அவனது,
மட்டற்ற கம்பீரம் அவனது,
நான் விரும்பிகேட்ட கதைகள் அவனது,
என் சாயலும் பிம்பமும் அவனது,
நான் பிறக்கும் முன்பே அவன் பாசம் என் மீதானது,
அவன் சிந்தனை என் பெயராய் ஆனது,
அவன் கைத்தடியாய் இருக்க எனக்கு ஆசை,
இருக்க முடியுமானால் நிதம் ஒரு கதை கேட்பேன் அவனிடம் சரித்திரம் படைக்க,
மண்ணோடு மண்ணாக நீ போனாலும்!! கிழவா என் மனதோடு மனதாவாய்!!

No comments:

Post a Comment